காதலியைக் கரம் பிடித்தார் மஹத்…!

பிக் பாஸ் புகழ் மஹத் தனது நீண்ட நாள் காதலியான பிராச்சி மிஷ்ராவைத் திருமணம் செய்யவுள்ளார்.

மாடலிங் துறையில் இருப்பது மட்டுமன்றி, சொந்தமாக வியாபார நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் பிராச்சி மிஷ்ரா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே இருவரும் காதலர்களாக வலம் வந்தனர்.

விரைவில் திருமணத் தேதி அறிவிக்கப்படவுள்ளதாகவும் திருமணத்துக்கு திரையுலகினர் அனைவரையும் அழைக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கார் மஹத்.

இருவருக்கும் நடந்த திருமண நிச்சயத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Mahat, Prachimishra
-=-