வெலிங்டன்: இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளதன் மூலம், கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்த காத்திருக்கிறார் நியூசிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெஸ்லர்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 ஆகிய மூன்றுவகைப் போட்டிகளிலும் தலா 100 போட்டிகளில் பங்கேற்றவர் என்ற சாதனைதான் அது.

ராஸ் டெய்லர் இதுவரை 231 ஒருநாள் போட்டிகள் மற்றும் 100 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதுவரை, மொத்தம் 99 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், தற்போது 100வது போட்டிக்காக காத்திருக்கிறார். 100 டெஸ்ட் போட்டியில் பங்கேற்றால் அது புதியவகை சாதனையாக அமையும்.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை, டேனியல் வெட்டோரி 112, ஃபிளமிங் 111 மற்றும் மெக்கல்லம் 101 ஆகியோர் 100 டெஸ்ட் போட்டிகள் என்ற மைல் கல்லை எட்டியுள்ளனர். தற்போது, அவர்களின் வரிசையில் ராஸ் டெய்லரும் இணையவுள்ளார்.