அல்பேனியா, அங்குவிலா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பிரிட்டன், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், ஜெர்மனி, ஜிப்ரால்டர், ஹங்கேரி, கிரீஸ், டென்மார்க், கனடா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்சி, அயர்லாந்து, ஐஸ்லாந்து, இத்தாலி, லாட்வியா , லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய 36 நாடுகளில் இருந்து ரஷ்யா வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்கிருந்து ரஷ்யா வர இருக்கும் ரஷ்யர்கள் மாற்று வழியில் வேறு நாடுகள் வழியாக தாயகம் திரும்ப அந்நாட்டு அரசு விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
உதாரணமாக அஜர்பைஜான், ஆர்மீனியா, கஜகஸ்தான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து ரஷ்ய விமானங்கள் மூலம் ரஷ்யா திரும்ப அறிவுறுத்தியுள்ளது.
தவிர லாட்வியா, லிதுவேனியா, போலந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் எல்லை வழியே சாலை மார்க்கமாக ரஷ்யா-வுக்கு வரவும் வலியுறுத்தியுள்ளது.
ரஷ்ய விமானங்கள் தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளில் உள்ளவர்கள் அவசர கால மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான விமான சேவைக்காக காத்திருக்காமல் உடனடியாக தாங்களாகவே முன்வந்து மாற்று வழியில் ரஷ்யா திரும்ப வேண்டும் என்று அறிவித்துள்ளது.