சென்னை: சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியாக சென்னை மாநகராட்சி டெண்டர் கோரி உள்ளது.
சாதாரண மழைக்கே தத்தளிக்கும் சென்னையை அழகுபடுத்தப்போவதாக தமிழ்நாடு அரசு கூறி வருகிறது. இதற்காக `சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களை கவரும் வகையில் பூங்காங்கள், சுற்றுலா தலங்களை அமைப்பதில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உலகின் மிக நீளமான கடற்கரையான சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் வகையிலும், அங்கு வரும் பொதுமக்கள் இயற்றை எழிலை கண்டு களிக்கும் வகையிலும் ரோப் கார் சேவை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.
அதன்படி, சென்னை மெரினாவில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகிற 17-ந் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கான வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.