கால்பந்து என்றாலே, உலக அளவில் மனதில் நிற்கும் ஜாம்பவான்கள் வெகு சிலரே. அதில், ரொனால்டோவும் ஒருவர். உலக அளவில் இவருக்கு ரசிகர் படை அதிகம். உலகின் கோடிஸ்வரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுவிட்டார். பணம், புகழ் எல்லாம் இருந்தும் ரத்ததானம் செய்யவேண்டும் என்பதற்காக, டாட்டூக்கள் குத்திக்கொள்வதில்லை எனக்கூறி அனைவரையும் நெகிழச்செய்துள்ளார்.

ronaldoரொனால்டோவிற்கு ரத்ததானம் செய்வது மிகவும் பிடிக்குமாம். டாட்டூக்கள் கைகளில் இருந்தால் நரம்புகளை கண்டுபிடிக்க நேரமாகும். எனவே, அவசரமாக ரத்ததானம் செய்யும்போது, டாட்டூக்காளால் சிக்கல் ஏற்படும். இதனால், டாட்டூக்களே குத்திக்கொள்வதில்லை என தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. அதில் ரொனால்டோவும் சிலநிமிடங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கிரம் ஸ்கிரீன்லையும் வந்து கலக்குங்க பாஸ். ரசிகர்கள் வெயிடிங்.

[youtube-feed feed=1]