டில்லி’

நாளை மக்களவை தேர்தல் வேட்பாளர்கள் குறித்து முடிவெடுக்கக் காங்கிரஸ் தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக கடந்த வாரம் 195 வேட்பாளர்கள் பெயர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

ஆனால் காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த வேட்பாளரின் பெயரையும் அறிவிக்கவில்லை.  இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில்,

“மார்ச் 7 ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு டில்லியில் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யும் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் முதல் கூட்டம் நடைபெறும்.”

என்று பதிவிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல்காந்தி முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.