டெல்லி: இன்று நடைபெறும் 2வது ரோஜ்கர் மேளா (வேலைவாய்ப்பு கண்காட்சி) வில் பிரதமர் மோடி 71ஆயிரம் பேருக்கு பணியானைகளை வழங்குகிகறார்.

பிரதமர் மோடி, கடந்த மாதம் (அக்டோபர்) 22ந்தேதி அன்று 1 மில்லியன் மக்களை ஆட்சேர்ப்பு செய்ய “ரோஜ்கர் மேளா”என்னும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்படி அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய  உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளின் அடியை மென்மையாக்க தனது அரசாங்கத்தின் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டினார். அன்றைய தினம், நாடு முழுவதும் 75,000 பேருக்கு மத்திய அரசுத் துறைகளில் பல்வேறு பணிகளுக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், மத்திய அரசின் ரோஜ்கார் மேளா (வேலைவாய்ப்பு கண்காட்சி) இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.   இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு கண்காட்சியில்,  பிரதமர் மோடி  71ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதம் வழங்கி உரையாற்றுகிறார். தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைன் புத்தாக்க பயிற்சி திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.

இந்த வேலைவாய்ப்பு பணி, தேர்தல் நடைபெறும் குஜராத், இமாச்சல் தவிர  நாடு முழுவதும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியானைகள் அந்த மாநிலங்களில் வழங்கப்பட உள்ளது. இதற்காக 45 இடங்களில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிப்பாட்டை இது காட்டுவதாக  தெரிவித்து உள்ளது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இது தூண்டுகோலாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.