புதுடெல்லி:
ங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே 160 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என்றும், கடலோர பகுதிகளில் மணிக்கு 40-55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்ககப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.