
சன் டீவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. ஆயிரமாவது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் இந்தியில் ரீமேக்காகிறது.
இந்த சீரியலில் லீட் ரோலில் சிபுசூரியன் நடிக்கிறார். கர்நாடக மாநிலம் சிவமோகாவில் பிறந்து வளர்ந்த சிபு சூரியன், கன்னட சீரியலான ‘ராதா ரமணா’வில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக ’பிரியங்கா நல்காரி’ நடிக்கிறார்.
இவர்களுடன் வடிவுக்கரசி, லதா சேதுபதி, ராஜேஷ் உள்ளிட்டோர் நடிகின்றனர். வில்லியாக அக்ஷையா அறிமுகத் தொடரில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
அண்மையில், வெளியான டி.ஆர்.பி ரேட்டிங்கில் ரோஜா சீரியல் பின்னடைவை சந்தித்திருந்தாலும், வரும் காலங்களில் பல்வேறு திருப்பங்களும், டிவிஸ்டுகளும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தற்போது தமிழில் வெற்றிகரமான தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ’ரோஜா’ சீரியல் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]