சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், துவக்க வீரர் ரோகித் ஷர்மா, சதமடித்து ஆடிவருகிறார்.
இன்றையப் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஷப்மன் கில், விராத் கோலி இருவரும் டக்அவுட்டாக, புஜாராவும் குறைந்த ரன்களுக்கு வெளியேறினார். எனவே, அணியின் சுமை ரோகித்தின் தோள்களில் ஏறியது. இவருடன் தற்போது ரஹானே சேர்ந்து கொண்டுள்ளார்.
இன்றையப் போட்டியில், ரோகித் நிதான ஆட்டமும் ஆடவில்லை. மொத்தம் 139 பந்துகளை சந்தித்த ரோகித், 2 சிக்ஸர்கள் & 14 பவுண்டரிகளுடன் 105 ரன்களை விளாசியுள்ளார். துணைக் கேப்டன் ரஹானே 56 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.
தற்போது இரண்டாவது செஷன் ஆட்டம் நடைபெற்றுவரும் நிலையில், 43 ஓவர்கள் வீசப்பட்டுள்ள சூழலில், இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்துள்ளது.
ரோகித்தும், ரஹானேவும் நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸை ஆடினால், முதல் நாளில் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டி, இங்கிலாந்திற்கு நெருக்கடி கொடுக்கலாம்.