மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், செர்பியாவின் ஜோகோவிக், ஆஸ்திரியாவின் தியம், ஜப்பானின் ஒசாகா ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.

ரஷ்யாவின் அனஸ்டாசியாவை 3வது சுற்றில் வென்ற செரினா வில்லியம்ஸ், நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். துனிசியாவின் ஆன்ஸ் ஜாபூரை வென்ற ஜப்பானின் ஒசாகா, 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் பிரிவில், உலகின் முதல்நிலை வீரரும், நடப்புச் சாம்பினுமான ஜோகோவிக், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், ஆஸ்திரியாவின் தியம், ஆஸ்திரேலியாவின் நிக் கிரியாஸை வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். இவர் தற்போது உலகின் 3ம் நிலை வீரராக உள்ளார்.