சென்னை

ணவகம் ஒன்றில் ரோபோக்கள் சப்ளையர்களாக பயன்படுத்தப் படுகின்றன

சென்னை ஓ எம் ஆர் சாலையில் உள்ள ஒரு சைனீஸ் உணவகத்தின் பெயர் ரோபோ.   பெயருக்கு ஏற்றபடி இந்த உணவகத்தில் ரோபோக்கள் சப்ளையர்களாக பணி புரிகின்றன.    இந்த சைனீஸ் உணவகத்தின் உரிமையாளர் சீனாவில் இருந்து 4 ரோபோக்களை இறக்குமதி செய்து சப்ளையர்களாக வைத்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் மேஜையில் வைக்கப்பட்டுள்ள ஐ பேட் மூலம் உணவை ஆர்டர் செய்கிறார்கள்.   அவர்களின் ஆர்டர்கள் டிரான்ஸ்மிட்டர்கள் மூலமாக சமையல் அறைக்கு செல்கின்றன.   அங்குள்ள சமையல் கலைஞர்கள் ஆர்டரின் படி சமைத்து ரோபோக்களின் கைகளில் பதிக்கப்பட்டுள்ள தட்டுகளில் வைத்து அனுப்புகின்றனர்.  அந்த ரோபோக்கள் வாடிக்கையாளர்கள் அமர்ந்திருக்கும் மேஜைக்கு உணவு வகைகளை எடுத்துச் செல்கிறது.

அது மட்டுமின்றி வாடிக்கையாளர்களை வரவேற்பதும் மேஜைக்கு அழைத்துச் செல்வதும் ரோபோக்களே செய்து முடிக்கின்றன.   ரோபோக்களுடன் வாடிக்கையாளர்கள் செல்ஃபி எடுத்துக் கொல்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   ஏற்கனவே  வந்துள்ள வாடிக்கையாளர்களை நினைவு வைத்துக் கொள்ளுமாறு ரோபோக்களின் மெமரி அமைக்கப்பட்டுள்ளது.    இந்த ரோபோக்களினால் இந்த உணவகம் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.