[embedyt] https://www.youtube.com/watch?v=KuoCHQhgMcg[/embedyt]

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘Mr. லோக்கல்’ மே 17-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.

இதில் ரோபோ சங்கர் பேசும்போது, படக்குழுவினரைப் புகழ்ந்து பேசிவிட்டு, ஒரு விஷயம் கேட்க வேண்டும் என பேசியது சர்ச்சையாக முடிந்தது.

“பத்திரிகையாளர்களுக்குப் படம் போட்டால் ஏன் ரொம்ப அமைதியாகப் பார்க்கிறீர்கள் , இங்குள்ளவர்கள் கைதட்டி ரசித்தால்தான், வெளியே இருப்பவர்கள் பலரும் கைதட்டி ரசிப்பார்கள் , நானும் பல ப்ரஸ் ஷோக்களுக்கு வந்து, ரொம்ப அமைதியாகப் பார்த்ததால் எழுந்து எல்லாம் போயிருக்கேன். என்று ரோபோ சங்கர் தெரிவித்தார்.

இதற்கு, “உங்களுக்கு கைதட்டிக் கொண்டிருந்தால் பேசுவதை எப்படிக் குறிப்பெடுப்பது? என பல பத்திரிகையாளர்கள் கோபப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்தவர்களைப் பேச அழைக்கும்போது, கைதட்டல்களுடன் அழைக்கிறேன் என்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மிர்ச்சி விஜய் கூறினார். இதுவும் சர்ச்சையாகி, “இது பத்திரிகையாளர் சந்திப்பா என்னது…” என்று பத்திரிகையாளர்கள் மீண்டும் கோபப்பட்டனர்.

இறுதியாகப் பேசிய சிவகார்த்திகேயன், ஒரு ப்ரஸ் ஷோ, ப்ரஸ் மீட் என்றால், அவர்களும் என்ஜாய் பண்ணுவார்கள். தினமும் 2 ப்ரஸ் மீட், 2 ப்ரஸ் ஷோ என்றால், அவர்களும் என்னதான் பண்ணுவார்கள். நம்ம எல்லாம் நமக்குப் பிடித்த படத்தை மட்டும்தான் பார்க்கிறோம். அவர்களோ, அனைத்துப் படங்களையும் பார்த்தாக வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு இது வேலையாகவே மாறிவிட்டது.

‘வந்திருப்பவர்கள் எல்லாம் ப்ரஸ்ண்ணே… ஃபேன்ஸ் இல்ல’ பத்திரிகையாளர்கள், பணிக்காக வந்துள்ளனர் ena கூறினார்.நம்ம என்ன பேசப் போகிறோம் என்பது, நம்மைவிட அவர்களுக்கு முன்பே தெரியும் என்று பேசி, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.