ராபர்ட் வதேரா சொத்து வாங்கியதாகn லண்டனில் கூறப்படுவது தவறு: ஆங்கில ஊடகங்கள் தகவல்

Must read

download (1)
சோனியாகாந்தி மருமகன் ராபர்ட் வதேரா லண்டனில் சொத்துவாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 2009ம் ஆண்டு.  லண்டன் ப்ரையன்ஸ்டன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள எல்லர்டன் ஹவுஸின் 12வது பிளாட்டை ராபர்ட் வதேரா 1.9  மில்லியன் பவுண்ட்களுக்கு  வாங்கியதாகவும், பிறகு , அதை விற்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது. 
இந்த நிலையில், லண்டன் ப்ரையன்ஸ்டன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள எல்லர்டன் ஹவுஸின் 12வது பிளாட்டை ராபர்ட் வதேரா வாங்கி விற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இது தொடர்பான ஆவணங்களையும் அவை வெளியிட்டுள்ளன.
 ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய நிறுவனங்கள் எதுவும் அந்த வீட்டை வாங்கவில்லை என்றும், அந்த வீட்டில் தற்போது ஹரால்டு மற்றும் ஷிர்லே ஆகியோர் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் 2005ம் ஆண்டு 9 லட்சத்து 50,000 பவுண்ட்களுக்கு அந்த வீட்டை வாங்கி தற்போது வரை வசித்து வருவதாகவும் அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு முதல் ஒரே நபர் வசமுள்ள வீட்டை 2009இல் ராபர்ட் வதேரா வாங்கி விற்றதாக கூறப்படுவது தவறானது எனவும் ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.   

 

More articles

Latest article