சேலம்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த சரவணன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது ஒரு வயது குழந்தையுடன், காரில் கோவிலுக்குச் சென்று விட்டு, குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தி விட்டு ஊர் திரும்பிக்கொண்டி ருந்தனர்.
கார் எருமப்பட்டி அருகே வரகூர் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்டபோது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பயங்கர மாக மோதியது.
இந்த கொடூர விபத்தில், கார் முழுவதும் உருக்குலைந்த நிலையில், அதனுள் இருந்த குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[youtube-feed feed=1]