சென்னை

நேற்றைய சட்டப்பேரவை தொடரில் பாமகவை தமிழக அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தொடர் தற்போது நடந்து வருகிறது.  நேற்றைய நிகழ்வில் பாமக இட ஒதுகீட்டை வைத்து நாடகமாடி தமிழக மக்களையும் குரிப்பாக வன்னிய மக்களை ஏமாற்றி வருடவதாக தமிழக அமைச்சர் சிவசக்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த செய்தி எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

அதில்,

”வன்னிய மக்களே!

இந்த வீடியோவை பாருங்கள்!

பெட்டி வாங்கி உங்களை ஏமாற்றும் பாமகவை நம்பாதீர்கள்!

சமூகநீதியை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கின்ற பா.ஜ.கவை தமிழ்நாட்டில் தூக்கிப் பிடிப்பவர்களாக நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள். 20% இடஒதுக்கீடு இருக்கின்ற காரணத்தினால்தான் வட மாவட்டங்களில் 10.5% என்று நீங்கள் கேட்கின்ற சதவீதத்தை விட கூடுதலாக வன்னியர் சமூக மக்கள் தங்களுக்கான உரிமைகளை பெறுகிறார்கள். நீங்கள் கேட்பது அதைக் குறைத்துக் கொடுப்பதற்கான வழியைதான் வகுக்கும்.

ஆனால் நீங்கள் புலி வாலை பிடித்துவிட்டீர்கள். அந்த புலியும் உங்களை விடாது, அந்த வாலையும் நீங்கள் விடமுடியாது! சட்டப்பேரவையில் பாமக MLA ஜி.கே.மணிக்கு பாடம் நடத்திய அமைச்சர் சிவசங்கர் வன்னிய மக்களுக்காக திமுக செய்தது ஏராளம் ,பாமக ஒன்றுமே செய்யவில்லை பாமக அப்பாவி இளைஞர்களை தூண்டிவிட்டு வழக்கு வாங்க வைத்தது தான் அதிகம்!”

என்று பதிவிடப்பட்டுள்ளது.

அதில் காணப்படும் வீடியோ இதோ