சென்னை

ரு  ஆய்வுக் கணிப்பின் மூலம் ஆர் கே நகரில் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் மோசம் என வாக்காளர்கள் கூறி உள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னை ஆர் கே நகரில் ஜெயலலிதா மறைவை ஒட்டி கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.   தீவிரப் பிரசாரம் நடந்து வரும் நேரத்தில் எக்கச்சக்கமான பண பட்டுவாடா புகார்கள் எழுந்தன.   அதை ஒட்டி அப்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டது.   அப்போது, பண பட்டுவாடாவில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

பேராசிரியர் ராஜநாயகம்

ஆனால் அந்தக் குற்றம் சாட்டப்படவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.   தற்போது இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.    இப்போதும் பணப் பட்டுவாடா புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.   தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும் பணப் பட்டுவாடா குறையவில்லை என ஆதாரத்துடன் பல அரசியல் கட்சிகள் புகார் அளித்துள்ளன.

பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் அண்மையில் அர் கே நகர் வாக்காளர்கர்களிடம் தேர்தல் ஆணைய செயல்பாடு குறித்து ஆய்வு ஒன்று நடைபெற்றுள்ளது.   இதில் கலந்துக் கொண்டவர்களில் 75% பேர் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை எனக் கூறி உள்ளனர்.   இந்த ஆய்வில் 10% கூட தேர்தல் ஆணையத்தை பாராட்டவில்லை.   மேலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மோசம் என 75.4% பேரும் 16.3% பேர் சொல்லும் படி இல்லை எனவும், சிறப்பு என 8.3% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.