சென்னை,
ஆர்.கே.நகரில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளையும், நாளை மறுதினமும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக இன்று பிற்பகலுடன் பிரசாரம் முடிவடைகிறது. நாளை மறுநாள் ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 21ம் தேதி மாலை வரை ஆர்.கே.நகரில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், வாக்கு எண்ணிக்கை நாளான 24 ம் தேதி அன்றும் ஆர்.கே.நகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது/
இதன் காரணமாக இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.