சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கில்,  தமிழகஅரசு, டிஜிபி பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாமறைவைத் தொடர்ந்து, அவரது தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.  இந்த தேர்தலில் சசிகலா சகோதரர் டிடிவி தினகரன் போட்டியிட்ட நிலையில், அவரை வெற்றிபெற வைக்கும் நோக்கில் வாக்காளர்கள் பணம் வாரி இறைக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்தல் அலுவலர்கள் கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அப்போதைய அமைச்ச இத்தேர்தலின்போது, பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து வருமான வரித்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து, பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை  சிபிஐ விசாரணை கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  இதுதொடர்பாக தமிழக அரசு, டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.