சென்னை
ஆர் கே நகர் இடைத்தேர்தல் மீண்டும் நிறுத்தப்படலாம் என ஒரு யூகம் கிளம்பி உள்ளது.
ஆர் கே நகர் தொகுதி இடைத் தேரதலில் தொடர் பணப்பட்டுவாடா புகார்கள் வந்த வண்ணமாகவே உள்ளது. அதையடுத்து இது குறித்து தேர்தல் சிறப்பு அதிகார் பத்ரா ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுக சார்பில் தம்பிதுரை, ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், வெங்கடேஷ் பாபு உள்ளிட்டோர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவை சந்திக்க, தலைமை செயலகம் வந்துள்ளனர்.
இது தவிர திமுக சார்பில் ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் அவரை சந்திக்க வந்துள்ளனர்.
தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவுடன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பணப்பட்டுவாடா புகார் குறித்து சந்திப்பு நடத்தி உள்ளார்..
இந்த சந்திப்புக்களைத் தொடர்ந்து மீண்டும் ஆர் கே நகரில் தேர்தல் நிறுத்தப்படக் கூடும் என ஒரு யூகம் மக்களிடையே எழுந்துள்ளது.