சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் என்று டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் 21ம்ந் தேதி நடக்கிறது. அரசியல் தலைவர்கள் இங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுயேட்சையாக போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் பேசுகையில், ‘‘ஆர்.கே.நகர் தேர்தல் தமிழக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தலாக அமையும். மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது’’ என்றார்.

[youtube-feed feed=1]