சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதன்படி தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று மதியம் 12.30 மணி அளவில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது டிடிவி தினகரன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக அண்ணா படம் இல்லாத கருப்பு சிவப்பு வெள்ளை கொடியுடன் தனது ஆதரவாளர்களு டன் படாடோபமாக வந்த டிடிவி தினகரன் சரியாக 12.55 மணிக்கு தண்டையார்பேட்டை பகுதி அலுவலகத்துக்குள் நுழைந்தார். அதைத்தொடர்நது சரியாக 1 மணி அளவில் அவர் தனது வேட்பு மனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

மேலும், தொப்பி சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவையும் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து 1.30 மணி அளவில் மதுசூதனன் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

வேட்புமனு தாக்கல்செய்ய டிசம்பர் 4-ம் தேதி இறுதி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5-ம் தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 7-ம் தேதி கடைசிநாள். வாக்குப்பதிவு டிசம்பர் 21ந்தேதி நடைபெறுகிறது.

கடந்த முறை அதிமுக சசிகலா அணி சார்பாக தொப்பி சின்னத்தில் இடைத்தேர்தலை சந்தித்த டிடிவி தினகரன் தற்போது சுயேச்சையாக களமிறங்குகிறார்.