சென்னை,
நடிகர் விஷால் தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாகவும், வேட்புமனுவில் போர்ஜரியாக கையெழுத்திட்டதாகவும் வழக்கு பாய்கிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து, வேட்புமனுவும் தாக்கல் செய்து பரபரப்பு ஏற்படுத்திய நடிகர் விஷால், போர்ஜரியாக வேட்புமனுவில் கையெழுத்து பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவரது வேட்புமனு தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால், சாலைமறியல் செய்து போக்குவரத்து பாதிப்பு உள்பட பல பிரச்சினைகளை கிளப்பியிருந்தார். அவரது செயல் ஊடகங்க ளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில், அவரது வேட்புமனு மீண்டும் பரீசிலிப்பதாக தேர்தல் அதிகாரி கூறியதாகவும், பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில, அவரது வேட்புமனுவில், அவரை ஆதரித்து கையெழுத்திட்ட, தீபன், சுமதி ஆகிய இருவரும் மீண்டும் தேர்தல் அதிகாரி முன்பு ஆஜராகி தங்களின் நிலையை தெளிவு படுத்தியதாக கூறப்பட்டது. அப்போது, தாங்கள் விஷாலுக்கு ஆதரவாக கையெழுத்திடவில்லை என்று கூறினர்.
இதன் காரணமாக, சுமதியையும் தீபனையும் தேடிய விஷால், அவர்கள் வீட்டுக்கே போகவில்லை என்பதை அவர்களது உறவினர்களிடம் பேசி ஆதாரமாக கொண்டு வந்து, மீண்டும் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுசாமியை சந்தித்து வாக்குவாதம் செய்தார்.
இதற்கு பதில் அளித்த தேர்தல் அதிகாரி, அன்று இரவு ‘நீங்கள் மிரட்டியதால், நான் அப்படி சொல்லும்படி ஆகிவிட்டது!’ என்றாராம். இதை மீண்டும் மீடியாக்களிடம் சொல்லி விஷால் பிரச்சினைகளை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாகவிஷால் மீது ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாவும், வேட்புமனுவில் பொய்யாக இருவரின் கையொப்பத்தை இட்டு மோசடி செய்ததாக இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.