சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ் ஆதரவாளரான மதுசூதனன் விருப்ப மனு கொடுத்துள்ளார். அவருக்கு போட்டியாக முன்னாள் எம்.பி. பாலகங்கா உள்பட 20க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

இது அதிமுகவில் இரு அணிகளுக்கு இடையேயான பிளவை உறுதிபடுத்தி உள்ளது.

ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு இரட்டைஇலை ஒதுக்கியதை தொடர்ந்து, காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் அதிமுக சார்பாக வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்க நேற்று அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் நடை பெற்றது. இதில் சலசலப்பு ஏற்பட்டதால், ஆட்சிமன்ற குழுவை மாற்றி அமைத்தும், விருப்பமுள்ளவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அதற்கு இரண்டு நாட்கள் அவகாசமும் கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஓபிஎஸ் அணி சார்பாக கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட மதுசூதனன், அதிமுக தலைமை அலுவலகம் வந்த மீண்டும் வாயப்பு கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்தார்.

அவருக்கு எதிராக, ஜெயக்குமார் ஆதரவாளரான முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான பாலகங்காவும் விரும்பமனு தாக்கல் செய்துள்ளார். மேலும், 20க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்தவர்கள் விருப்பமனு கேட்டு அதிமுக தலைமையிடம்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையேயான புகைச்சல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுவரை விருப்பமனு கொடுத்துள்ள முக்கியமானவர்கள் விவரம்:

மதுசூதனன் (அதிமுக அவைத்தலைவர்), பாலகங்கா (முன்னாள் எம்.பி.),  தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்), வக்கீல் ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயின் (மாவட்ட துணை செயலாளர்), ஏ.ஏ.எஸ். முருகன் (வடசென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்), ஆதிராஜாராம் (முன்னாள் மாவட்ட செயலாளர்), கு.சம்பத் (முன்னாள் செயல் அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை)., அஞ்சலட்சுமி (முன்னாள் கவுன்சிலர்).