சென்னை,
நடைபெற உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே, பாமக, தேமுதிக போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ள நிலையில், தற்போது தமாகாவும் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவு கிடையாது என்று அறிவித்து உள்ளது.
ஜெ.மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு இரண்டாவது தடவையாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக சார்பாக, ஏற்கனவே போட்டியிட்ட மருதுகணேசே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். டிடிவி தினகரனும் தனி அணியாக மீண்டும் களமிறங்குகிறார். அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. தீபாவும் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார்.
திமுகவுக்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் ஒதுங்கி நிற்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, த.மா.கா. எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் கூறி உள்ளார்.