சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ந்தேதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்கனவே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், பணப்பட்டுவாடா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது.

அதன்பிறகு இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தால் தேர்தல் அறிவிப்பு தள்ளி போனது.

இது தொடர்பான வழக்கில், டிசம்பர் 31ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று வேட்பு மனு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்பு மனு விவரம்

நவம்பர் 27ல் வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனு கடைசி நாள் டிசம்பர் 4ந்தேதி

வேட்பு மனு பரிசீலனை டிசம்பர் 5ந்தேதி

வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் டிசம்பர் 7ந்தேதி

வாக்குப்பதிவு டிசம்பர் 21 ந்தேதி

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24ந்தேதி

இவ்வாறு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலின்போது,  யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வி.வி.பேட் இயந்திரங்கள் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இன்று முதல் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ஆணையர் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.