சென்னை,

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த முறையை தேர்தலை நியாயமாக நடத்தும் விதத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொகுதிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிக்கும் வகையில் 3 தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கார்ப்பரேசன் அலுவலகமான ரிப்பன் மாளிகையில், 3 உதவி செயற்பொறியாளர்கள் தலைமை யில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 1913 மற்றும் 1800-4257012 என்ற இலவச தொலைபேசி எண்கள் வாயிலாக புகார் தெரிவிக்கலாம். என மாவட்ட தேர்தல் அலுவலர்  அறிவித்துள்ளார்.