
சென்னை
ஆர் கே நகர் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆர் கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் தினகரன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதை ஒட்டி அங்கு மாபெரும் கலவரம் நடைபெற்றுள்ளது.
தினகரன் அணி முகவர்களுக்கும் அதிமுக முகவர்களுக்கும் இடையில் கடும் ரகளை ஏற்பட்டுள்ளது. இரு அணியினரும் மேஜைகள், மைக்குகள் நாற்காலிகளை உடைத்துள்ளனர். அதிமுகவை சேர்ந்த பெண் முகவர்கள் உட்பட 4 பேர் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.
தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்துள்ளனர். இரண்டாவது சுற்று எண்ணிக்கை துவக்கத்தில் ரகளை ஆரம்பித்துள்ளது.
தற்போது மீண்டும் துவங்கி உள்ளது
Patrikai.com official YouTube Channel