பாரதிய ஜனதாக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி மற்றும் பீகார் முன்னாள் முதல்வரும் , லாலு பிரசாத் மனைவியுமான ராய்ரி தேவியையும் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர்களாக ராஸ்திரிய ஜனதா தள்( ஆர்.ஜே.டி. ) அறிவித்துள்ளது.
ராஜ்யசபையில் பா.ஜ.க.வின் சார்பாக அதிரடியாய் பேசிவரும் சுப்ரமணியன் சாமிக்கு கடுமையான சவாலாய் ராம்ஜெத்மலானி விளங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பீகாரரில் இருந்து ஏழு கவுன்சில் மற்றும் ஐந்து ராஜ்யசபை பதவிகளுக்கு ஜூன் 10 மற்றும் 11 தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. 243 இடங்கள் உள்ள பீகார் சட்டமன்றத்தில் ஆர்.ஜே.டி க்கு 80 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளதால், எளிதில் இரண்டு கவுன்சில் மற்றும் இரண்டு ராஜ்யசபை பதவிகள் கிடைத்துவிடும்.
லாலுப் பிரசாத் யாதவின் கால்நடைத்தீவன ஊழல் வழக்கிற்காக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வருவதால் இவருக்கு எளிதில் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிபதி குன்கா தீர்ப்பையொட்டி ஜெயலலிதா பார்ப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்ட போது , இவருக்காக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீனுக்காக வாதாடியவர்.
இந்திய சட்ட அமைச்சராகவும் வழக்கறிஞரவைகளின் தலைவராகவும் பல பதவிகளில் பொறுப்பாற்றியிருக்கிறார். மும்பையிலின்று இவர் ஆறாவது மற்றும் ஏழாவது மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சியின்சார்பில் தெரிந்தெடுக்கப்பட்டார். அடல் பிகாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் சட்டத் துறை அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் 2004 -ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாச்பாயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2010 -ம் ஆண்டு மீண்டும் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்த இவர், மாநிலங்களவைக்கு அக்கட்சியின் சார்பில் தெரிந்தெடுக்கப்பட்டார்.
இந்திய வழக்கறிஞர்களிலேயே மிகக்கூடுதலான ஊதியம் பெறுபவராகவும் அறியப்படுகிறார்.
ராம் ஜெத்மலானிக்கு இரண்டு மனைவிகள் பல பெண் தோழிகள் உண்டு . அவர் இயற்கை நியதிக்கு எதிராக செயல்படுகின்றார் என்று 2013ஆம் ஆண்டு விமர்சித்து இருந்தார்.
2013 நவம்பர் 8 அன்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசுகையில், புராணக்கதை ராமர் ஒரு மோசமான கணவர், மனைவியை தீக்குளிக்கச் செய்தவர் என்றும் கூறியதற்காக அவர் மீது 153 A பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி மீது தான் கொண்டிருந்த கனவுகளை அவரே சிதைத்துவிட்டார் என்று சமீபத்தில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நடத்திவரும் போராட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்து இருந்தார்.
பாகித்தானின் சிந்த் மாநிலத்தில் உள்ள சிக்கார்பூரில் செப்டம்பர் 14, 1923, பிறந்த ஜெத்மலானி தனது பதினெட்டாம் அகவையிலேயே சட்டப் படிப்பை முடித்து, இந்தியப் பிரிவினை வரை தனது சொந்த ஊரிலும் (தற்போதைய பாகித்தானில் உள்ளது), பிற்பாடு மும்பையிலும் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார்.