நடிகர், இயக்குனர், வி.ஜே., ஆர்.ஜே., கிரிக்கெட் கமென்டரி என்று பல தளங்களில் கலக்கி வருபவர் ஆர்ஜே பாலாஜி.
இவர் கதாநாயகனாக நடித்த எல்கேஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய படங்கள் வெற்றிபெற்றதை அடுத்து தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தை இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கவுள்ளார்.
இதில் ஆர்ஜே பாலாஜி-க்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிக்க உள்ளார்.
ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு துவங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.