2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. ரூ.29 கோடி செலவில் முழுநீள காமெடி திரைப்படமாக உருவான இப்படம், ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்தப் படத்தை தமிழில் இயக்க ஆர்.ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

இந்த ரீமேக் படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது .

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் பகுதிகளில் கடந்த வாரம் தொடங்கியுள்ளதாகவும் தொடர்ச்சியாக 45 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பு முழுவதையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.