மூக்குத்தி அம்மனை தொடர்ந்து மேலுமொரு படத்தில் ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடிக்கிறார். இது வெற்றிப் பெற்ற இந்தி படமொன்றின் தழுவல்.

’பதாய் ஹோ’ இந்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆயுஷ்மான் குரானா நடித்த இந்த படம் 2018-ல் வெளியானது. 29 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், 220 கோடி ரூபாய் வரை வசூலை குவித்தது. இந்நிலையில், இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி தமிழில் அவரே இயக்கி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பையனுக்கு கல்யாணம் முடிக்கிற நேரத்தில் அம்மா கர்ப்பமாக இருந்தால் எப்படி இருக்கும்? இதான் படத்தின் கதை.

ஆயுஷ்மான் குரானா நடித்த வேடத்தில் ஆர்ஜே பாலாஜியும், அவரது அப்பா வேடத்தில் சத்யராஜும், அம்மா வேடத்தில் ஊர்வசியும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வீட்ல விசேஷங்க என பெயர் வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.