Rivals unhappy as Maria Sharapova gears up for Stuttgart Open

 

ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்போது தடைவிதிக்கப்பட்ட மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்திய தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவருக்கு 15 மாதம் தடைவிதிக்கப்பட்டது. இந்தத் தடை தற்போது நீங்கியுள்ளது. இதனால் அவர் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு ‘வைல்டுகார்டு’ கிடைக்குமா? என்ற கேள்வி எழும்பியது.

 
இந்நிலையில் ஸ்டட்கார்ட் டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்காக, அந்தத் தொடரின் அமைப்பாளர்கள் ஷரபோவாவிற்கு வைல்டுகார்டு கொடுத்துள்ளனர். இதனால் புதன்கிழமை மீண்டும் டென்னிஸ் அரங்கில் களம் இறங்க இருக்கிறார்.

ஸ்டட்கார்ட் தொடரின் முதல் சுற்றில் ரொபர்ட்டா வின்சியை எதிர்கொள்கிறார். இதில் வெற்றில் பெற்றால் 2-வது சுற்றில் போலந்தின் ரட்வன்ஸ்காவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மரியா ஷரபோவாவிற்கு வைல்டுகார்டு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர் ரட்வன்ஸ்கா என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், எதிர்பாராத காயம், உடல்நலக்குறைவு போன்றவற்றால் விளையாட முடியாமல் தடைபட்டிருந்தவர்களுக்கு மட்டுமே வைல்ட் கார்ட் வழங்கப்பட வேண்டும் என்றும், போதை மருந்து விவகாரத்தால் தடைவிதிக்கப்பட்டவர்களுக்கு வைல்ட் கார்ட் வழங்கக் கூடாது என்றும் ரட்வன்ஸ்கா தெரிவித்திருந்தார். அந்த வகையில் ஷரபோவா மீண்டும் களமிறங்குவது அவர்களுக்கு அதிருப்தியையே அளித்திருக்கிறது.