Rising Pune Supergiant’s 5 wicket win over Gujarat Lions with maiden hundred

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் புனே அணி அபார வெற்றி பெற்றது.

 

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றைய ஆட்டத்தில் புனே அணியும், குஜராத் அணியும் மோதின. புனேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த குஜராத் அணி, 19.5 ஓவர்களில்‌ அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, மெக்குலம் 27 பந்துகளில் 45 ரன்களை எடுத்தார்.

 

புனே அணி தரப்பில் உனட்கட், இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளையும் தாகூர், கிறிஸ்டியன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

இதையடுத்து களமிறங்கிய புனே அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ரஹானே 4 ரன்னிலும், திரிபாதி 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் 4 ரன், மனோஜ் திவாரி 0 என பெவிலியன் திரும்ப, பென் ஸ்டோக்ஸ் தனி ஆளாக நின்று விளாசினார். சிறப்பாக விளையாடிய அவர், 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளை விளாசி, 63 பந்துகளில் 103 ரன்களை குவித்தார். இதன்மூலம் புனே அணி, 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். புனே அணிக்கு இது 6வது வெற்றியாகும். குஜராத் அணிக்கு இது 7 வது தோல்வி.