கள்ளக்குறிச்சி:

ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.கார்த்திகேயன் மனைவியும், மகளும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவ கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால் அனைவரும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி, திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வசந்தம் கார்த்திகேயன். இவர், தன் தொகுதியில், 3 மாதங்களாக, தினமும் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்கி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், இவரது மனைவி இளமதி (40) மற்றும் இளைய மகள் மகன்யா(8) இருமல், காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து, இருவரும் பெரம்பலுார் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மற்றும் அவரது குடும்பத்தினர், 7 பேரும் பரிசோதனை செய்தனர். மேலும், அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.