சிட்னி
சமீபத்திய இந்திய – ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தின் மூலம் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பந்த் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார். அப்போது அது ஒரு சாதனையாக பேசப்பட்டது. அதன் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் சார்பில் விளையாடிய போதும் அவர் அதிகம் புகழடையாமல் இருந்தார்.
ரிஷப் பந்த் தற்போதைய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சர்வதேச அளவில் 59 ஆம் இடத்தில் இருந்தார். அதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் பந்தயங்களில் அவர் 350 ரன்கள் எடுத்தார். அத்துடன் 20 கேட்சுகளும் பிடித்தார். அதை ஒட்டி அவர் இந்தியாவின் புகழ்பெற்ற விக்கட் கீப்பர் வரிசையில் சேர்ந்துள்ளார்.
தற்போது ரிஷப் பந்த் தர வரிசைப்புள்ளிகளில் 673 புள்ளிகள் பெற்றுள்ளார். இதற்கு அடுத்தபடியாக தோனி 662 புள்ளிகள் பெற்றுள்ளார். இவ்வாறு தோனியின் சாதனையை முறியடித்து ரிஷப் பந்த் புதிய சாதனை படைத்துள்ளார்.
அது மட்டுமின்றி தற்போதைய தர வரிசைப் பட்டியலில் ரிஷப் பந்த் 17 ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்திய விக்கட் கீப்பர்களில் ஃபரூக் எஞ்சினீயருக்கு அடுத்த படியாக ரிஷப் பந்த் கிடு கிடு என முன்னேறி உள்ளார். அதே நேரத்தில் தர வரிசைப் புள்ளிகளில் ஃபரூக் எஞ்சினியர் 619 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.