அவமானம்!: இந்திய அமைச்சரின் அடாவடி: ஒலிம்பிக் கமிட்டி எச்சரிக்கை!

Must read

ரியோ டி ஜெனீரோ:
லிம்பிக் கிராமத்தில்  அடாவடியாக நடந்து கொண்டார் என்று இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் மீது குற்றம் சாட்டியுள்ள ஒலிம்பிக் கமிட்டி, அவருக்கான அனுமதி உத்தரவை ரத்து செய்யப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசில் தலைநகரான ரியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டி நடந்துவருகிறது.  இந்தியவிளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயலும், ஒலிம்பிக் வீரர்களுடன்  அங்கு சென்றுள்ளார்.
1
அனுமதி அளிக்கப்படாத நபர்களை, கோயல் தன்னுடன் ஒலிம்பிக் விளையாட்டு நடைபெறும் பகுதிக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.    இதைத் தடுக்க முயன்ற காவலர்களுடன் விஜய் கோயல் கடும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, காவலர்களை தள்ளி விட்டதாகவும் ரியோ ஒலிம்பிக் கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது.
விஜய் கோயலின் செயல்பாடு தொடருமானால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகார அனுமதியை ரத்து செய்து விடுவோம் என்றும் கமிட்டி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியக் குழுத் தலைவர் ராகேஷ் குப்தாவுக்கு இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் ஒலிம்பிக் கமிட்டி அனுப்பி உள்ளது.
அமைச்சர் கோயலின் நடவடிக்கைகள், இந்தியாவுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 

More articles

Latest article