சிட்னி: இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், தனது கீப்பிங் திறமையை இன்னும் செப்பனிட்டுக் கொள்ள வேண்டுமென்று கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங்.
சிட்னி டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் புதுமுக துவக்க வீரர் வில் புகோவ்ஸ்கி அளித்த 2 கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட புகோவ்ஸ்கி, அரைசதம் அடித்து அவுட்டானார்.
ஆனால், அந்த கேட்ச் பிடிக்கப்பட்டிருந்தால், ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கத்திலேயே நெருக்கடி ஏற்பட்டிருக்கும்.
ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளதாவது, “ரிஷப் பண்ட் அந்த கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டிருக்கக்கூடாது. அப்படி செய்திருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கத்திலேயே நெருக்கடியை கொடுத்திருக்கலாம். ஆனாலும், ரிஷப் பன்ட் அதிர்ஷ்டசாலிதான். ஏனெனில், வில் புகோவ்ஸ்கி நிலைத்து நின்று ஒரு சதமோ அல்லது இரட்டை சதமோ அடித்துவிடவில்லை.
ரிஷப் பன்ட் தனது கீப்பிங் திறனை இன்னும் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றுள்ளார் ரிக்கிப் பாண்டிங்.
ரிக்கிப் பாண்டிங் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ஐபிஎல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளவர் ரிஷப் பன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.