பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஆர்.எப்.ஐ.டி. கணினி வருகை பதிவு அட்டை வழங்க அதிமுக தலைமை ஏற்பாடு…

Must read

ஜூன் 23 ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கலைந்தது.

இந்த கூட்டத்தில் இடம்பெறும் தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்தது, இது தொடர்பாக ஈ.பி.எஸ். தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் வரும் 11 ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையுடன் கூடிய கணினி வருகைப் பதிவு அட்டை வழங்கப்பட இருக்கிறது.

ஆர்.எப்.ஐ.டி. எனும் இந்த கணினி வருகைப் பதிவு அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே நுழைய தேவையான ஏற்பாடுகளை அதிமுக தலைமை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

More articles

Latest article