டெல்லி: நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை  ஏஐசிடிஇ வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கும்ட மேலாக மூடப்பட்டுள்ள கல்லூரிகள், தற்போது தொற்று பரவல் தணிந்ததையடுத்து திறக்க ஆயத்தமாகி வருகின்றனக. இந்த நிலையில்,  புதிய கல்வியாண்டுக்கான” கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை’ யை அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார இணைப்பை ஆகஸ்ட் 31-க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும்.

நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கையை அக்டோபா் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

கல்லூரிகளில் சோ்க்கை ஆணை பெற்ற மாணவா்கள் அக்டோபா் 20-ஆம் தேதிக்குள் விலகிவிட்டால் முழு கட்டணத்தையும் நிா்வாகம் வழங்க வேண்டும்.

மேலாண்மை கல்வி நிறுவனங்கள் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை செப்டம்பா் 20-ஆம் தேதி வரை நடத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.