சென்னை
தமிழகத்துக்குத் திரும்பி வரும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பணி அளிப்போர் செலவில் கொரோனா பரிசோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் புலம் பெயர் தொழிலாளர்கள் பெரிதும் துயர் அடைந்தனர். இங்குப் பணி இன்றி ஊதியம் இன்றி உணவு, இருப்பிடம் இன்றி தவிக்க நேர்ந்தது. இதில் சிலர் கால்நடையாகச் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்று வழியில் பலர் உயிர் இழந்த அவலமும் நிகழ்ந்தது.
மத்திய அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து இவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது. தற்போது ஊரடங்கு விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் திரும்பி வரத் தொடங்கி உள்ளனர். பணி அளிப்போர் பலர் இவர்களை மீண்டும் அழைத்து வருகின்றனர். இது குறித்து தமிழக அரசு ஒரு புது உத்தரவை வெளியிட்டுள்ளது.
அந்த உத்தரவில், ”இவ்வாறு திரும்பி வருவோர் அவசியம் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். இதற்கான கட்டணத்தைப் பணி அளிக்கும் நிறுவனங்கள் அல்லது ஏஜண்டுகள் அளிக்க வேண்டும். பேருந்து அல்லது வான் எப்படி வந்தாலும் நிறுவனம் அவசியம் இ பாஸ் பெற வேண்டும். இவ்வாறு வருபவர்கள் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்ட பிறகே பணி அளிக்க வேண்டும்.