அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் 60ஆக உயர்த்தப்பட்டது! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

Must read

சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் 60ஆக உயர்த்தப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார  நிலைமையை சமாளிக்க அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக தமிழக அரசு உயர்த்தி அறிவித்தது. இந்தநிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்ததால் பொருளாதாரத்தில் எதிர்பார்த்த மேம்பாடு எட்டப்படவில்லை. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக அதிகரித்து உத்தரவிட்டார்.

இதனால், சுமார் 27 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவது தவிர்க்கப்பட்டது. அதே வேளையில் 27ஆயிரம் இளைஞர்களுக்கு பணி கிடைப்பதும் பறிபோயுள்ளது. இதனால் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஓய்வுபெறும் வயதை குறைத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுக அரசு அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக்கி அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60ஆக உயர்த்தப்பட்டது – அடிப்படை விதி 56ல் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்து என கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article