திருச்சி:  அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க இன்று காலை திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  எதிராக முதன்முறையாக போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஸ்டாலின் வருகைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்பட்டது.. அதே வேளையில் மற்றோருபுறம் திமுகவினர் முதலமைச்சருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வந்துள்ளார். அங்குள்ள  அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளை வழங்குவதுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் சாலை முழுவதும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பல நூறுபேர் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும், தங்களத கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்று கூறி ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கங்ள  திருச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டும், சாலையில் அமைர்ந்தும்   போராட்டத்தில் ஈடுபட்டனர்.


முதலமைச்சர் வரும் நேரத்தில் இந்த போராட்டம் நடைபெற்றதால்,  திருச்சி ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. முதலமைச்சர் திருச்சியில் இருந்து மணப்பாறை செல்லும் சாலைக்கு அருகில் உள்ள ஆட்சியர் அலுவலக சாலையை தொழிலாளர்கள் முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டு போராட்டத்தை கைவிடச் செய்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பஞ்சப்படி உள்பட பல்வேறு சலுகைகள், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என தேர்தல் சமயத்தில் ஸ்டாலின வாக்களித்தாகவும், பின்னர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று சட்டமன்றத் தேர்தலில் அறிவிக்கப்பட்டது.  ஆனால் பதவி ஏற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், தங்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை, தங்களை திமுக அரசு ஏமாற்றுகிறது என கூறி,. முதலமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு வகையில், இன்று சாலை மறியலில் ஈடுபட்டjக அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு, சமீப காலமாக அவர்மீதான குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்கள், தங்களை திமுக அரசு ஏமாற்றி விட்டதாக கூறி உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், தற்போது அரசு போக்குவரத்து தொழிலாளர்களும், தங்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது என போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதையடுத்து முதல்வரின் பயணத்தை வேறுவழியாக மாற்றினர். இதையடுத்து திருச்சியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனால் பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெருக்கடி சமாளிக்க முடியாமல் திணறினர்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு, அவருக்கு எதிராக, அவரும் வரும்போது, முதன்முறையாக திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டடத்தில் குதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: வீடியோ போட்டோ உதவி: InewsTamil, Trichy