சென்னை: மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், மாநில சுயாட்சியை மீட்டெடுக்கவும், மத்திய – மாநில அரசுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும்  ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படுவதாகவும், இக்குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைவராக இருப்பார் என்றும் சட்டப்பேரவையில்8 அறிவித்தார்.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப், தனக்கு பொறுப்பு வழங்கிய  முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஜோசப் குரியன் அளித்த பேட்டியில், “மாநில சுயாட்சி குறித்த அரசமைப்பு சட்ட விதிகளை ஆராய அமைக்கப்பட்ட குழு வெளிப்படை தன்மையுடன் செயல்படும். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் குழுவின் செயல்பாடுகள் அமையும். மாநில உரிமைகளை பாதுக்காக்க, இக்குழுவை அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.

கடந்த காலங்களில், இராஜமன்னார் குழு தொடங்கி இதர குழுக்கள் வெளியிட்ட ஆணைகளை, இக்குழு பரிசீலிக்கும். மேலும், இக்குழுவில் நான் புரியும் பணிக்கு, நான் ஊதியம் பெற விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.

யார் இந்த குரியன்?

நீதிபதி குரியன் ஜோசப், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி சர்ச்சையை ஏற்படுத்தியவர்.  கொலிஜியம் சீர்திருத்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேலும் 3 உச்சநீதிமன்ற நீதிபதிகள் சேர்ந்து, அப்போதைய தலைமை நீதிபதி மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதன்மூலம் பிரபலமானவர்.

கேரளாவை சேர்ந்த குரியன்,  1979-ம் ஆண்டு கேரள  உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்  பணியை தொடங்கியவர். 1987-ல் அரசு வக்கீலாகவும், 1994-1996 இடைபட்ட காலங்களில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும், 1996-ல் மூத்த வக்கீலாகவும் நிலை உயர்வு பெற்றார்.

இதைத்தொடர்ந்து,க டந்த 2000-ம் ஆண்டு கேரள  உயர்நீதிமன்ற நீதிபதியாக  பதவி உயர்வு பெற்றவர், பின்னர்  கேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக 2 முறையும், இமாசலபிரதேச  உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதியாக 2010-ம் ஆண்டுமுதல் 2013-ம் வரை இருந்தார். அப்போது பல்வேறு வழக்குகளில் அதிரடி தீர்ப்புகளை வழங்கி பெயர் பெற்றவர்.

இதையடுத்து, ஜோசப் குரியன்,  2013-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, 5 ஆண்டுகள் பணியாற்றி, 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். மேலும் கல்வி, சட்டச் சேவைகள் சார்ந்து பல்வேறு பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.

இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 நீதிபதிகளில்  இவரும் ஒருவர். நீதிபதி நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர கொலீஜியத்தில் சீர்திருத்தம் தேவை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

[youtube-feed feed=1]