சென்னை: தமிழகஅரசுக்கு எதிராக மாநிலம் முழுவரதும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் சட்டையின்றி அரைநிர்வாண போராட்டம் நடத்தினர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள், மின்வாரிய அலுவலகம் முன்பு அரை நிர்வாணத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்திருந்தபடி மின்சாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கக்கூடிய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை அவர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பலமுறை தமிழகஅரசுக்கு நினைவூட்டல் செய்தும், அரசு மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி, கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறி இன்று அரை நிர்வாண போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னையில் அண்ணாசாலையில் மின்வாரிய தலைமை அலுவலகம் உள்பட மாநிலம் முழுவதும் ஏராளமான இடங்களில், மின்வாரிய அலுவலகம் முன்பு குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.