சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்டு மாதங்கள் வரை நடத்தப்பட்ட செரோ சர்வேயில்,  ஒட்டுமொத்த செரோபிரெவலன்ஸ் 70 சதவிகிதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக  விருதுநகர் மாவட்டத்தில் 88 சதவிகிதமாக உயர்ந்தும், குறைந்த பட்சமாக கரூர் மாவட்டத்தில் 51% செரோபோசிட்டிவிட்டி இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.‘

நாடு முழுவதும் 2020ம் ஆண்டு மார்ச்சில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போதுதான் கட்டுக்குள் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி என்று கூறப்படுகிறது. தமிழகத்தில்  முதலாவது கொரோன அலை (Corona First Wave)  போல் இரண்டாவது கொரோனா அலையிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதுகொரோனா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,74,233 ஆக உள்ளது.

இதையடுத்து, கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானோரில் பெரும்பாலானவர்களுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியவில்லை. அதையடத்து, தமிழக சுகாதாரத்துறை,  பொதுமக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து அதில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனைகள் நடத்தி வருகிறது. ஏற்கனவே 2 முறை இதுபோன்று செரோ சர்வேகள் நடத்தப்பட்டன.

தற்போது 3வது முறையாக, மாநிலம் முழுவதும்  கடந்த ஜூலை முதல் ஆகஸ்டு மாதங்கள் வரை  சோதனைகள் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

அதன்படி, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த செரோபிரெவலன்ஸ் 70 சதவிகிதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக விருதுநகரில் 88 சதவிகிதமும், தென்காசியில் 83 சதவிகிதமும், சென்னையில் 82 சதவிகிதம் அளவிலும் உள்ளது. மிகக்குறைந்த அளவாக கரூரில் 51 சதவிகிதம் மட்டுமே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த 38 மாவட்ங்களில் 17 மாவட்டங்களில் செரோபிரெவலன்ஸ் 70 சதவிகிதத்திற்கு அதிகமாகவும், 17 மாவட்டங்களில் 60சதவிகிதத்திற்கு மேலாகவும்,  6 மாவட்டங்களில் மட்டும் 60 சதவிகிதத்திற்கும் குறைவாக செரோபிரெவலன்ஸ் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.