சென்னை
வரும் 2026 ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் யார் என்பது குறித்த கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன.
வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர ஈடுபட தொடங்கிவிட்டதைக் காண முடிகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்று, ‘இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு’ சார்பில் நடந்த கருத்துக்கணிப்பு நடத்திதியது. அதில்,
பிப்ரவரி 5-ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி வரை 234 சட்டமன்ற தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 77.83 சதவீத பேருடன் முதலிடத்திலும், எடப்பாடி பழனிசாமி 73.30 சதவீத பேருடன் 2-வது இடத்திலும் உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் 67.99 சதவீத பேருடன் 3-வது இடத்திலும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை 64.58 சதவீத பேருடன் 4-வது இடத்திலும் தவெக தலைவர் விஜய் 60.58 சதவீத பேருடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
தற்போது உள்ள சூழலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 17.7 சதவீத பேர் திமுக என்றும், 17. 3 சதவீத பேர் அதிமுக என்றும் கூறியுள்ளனர். 12.20 சதவீத பேர் தவெக என்றும், 5 சதவீத பேர் பாஜகவுக்கு வாக்களிப்போம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Next TN CM, opinion poll, results,