சென்னை:  மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தும் விதமாக மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் 2026 சட்டமன்ற தேர்தல், பருவமழை நிலவரம் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தும் விதமாக மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

அதாவது,  2026ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே கட்சி நிர்வாகிகளை களத்தில் இறங்கி உள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தற்போது,  மாநில அரசின் மக்கள் நலன்களுக்கான திட்டங்கள்  பொதுமக்களை சென்றடைகிறதா என்பதை கண்டறிய, வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக 13 அமைச்சர்களுக்கு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

அதற்கான பொறுப்புகளை ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன் விவரம் வருமாறு;

கே.என். நேரு – நெல்லை மாவட்டம்

ஐ. பெரியசாமி – தேனி மாவட்டம்

எ.வ. வேலு – திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – தர்மபுரி

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – தென்காசி

தங்கம் தென்னரசு – கன்னியாகுமரி

மு.பெ. சாமிநாதன் – நீலகிரி

சக்கரபாணி – கிருஷ்ணகிரி

செந்தில்பாலாஜி – கோவை

காந்தி – காஞ்சிபுரம்

எஸ்.எஸ். சிவசங்கர் – பெரம்பலூர்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி – நாகை

சி.வீ.மெய்யநாதன் – மயிலாடுதுறை