வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துக்கள் யூடியூப் காணொளி தளத்தில் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக,  YouTube காணொலி  பற்றிய கருத்துகளை  இயல்பாக மறைத்து வைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒருவேளை தங்கள் சேனல்களில் உள்ள மறுமொழிகளை வாசகர்களுக்கு காட்ட விருப்பமாக இருந்தால் சேனலில் இயக்குநர் அந்த வசதியை தேர்வு செய்துகொள்ளலாம், அதுவரை எந்த மறுமொழியும் இயல்பாக காட்டப்படாது என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த வசதி ஆன்டிராய்டில் உள்ள யூடியூப் காணொலிகளுக்கு மட்டுமே , அல்லது  iOS உள்ள காணொலிகளுக்கும் இந்த வசதி உண்டா என்பதை பற்றி கூகிள் நிறுவனம் விளக்கவில்லை

சமீபகாலமாக இந்தியாவில் யூடியூப் பார்வையாளர்கள்  வெறுக்கத்தக்க அளவில் காணொலிகளை பற்றிய மறுமொழிகளை கொடுப்பதால் கூகிள் நிறுவனம் இந்த முடிவுக்கு வந்துள்ளது

இதே போல் பேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியிலும் விருப்ப பொத்தானை மறைக்க இன்ஸ்டாகிராம் தி்ட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

-செல்வமுரளி