டெல்லி:  லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல்காந்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் பாஜக தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இனால், அவை மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய முதல் நாளிலேயே முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கியது. அவை தொடங்கியதும் முதலாவதாக, மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் கொண்டுவந்தார்.  இந்த தீர்மானத்தின் போது பேசிய ராஜ்நாத்சிங் லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த அவையில் உறுப்பினராக உள்ள ராகுல் காந்தி, லண்டனில் இந்தியாவை அவமதித்தார். அவரது கருத்துகளை இந்த அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கண்டிக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அ தீர்மானத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில், அதானி பங்குகள் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்தும், ஜேபிசி கோரியும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.